98 நாடுகளுக்கு இந்தியா 16கோடியே 29 லட்சம் தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கொரோனா தடுப்பூசி வினியோகம் பற்றிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவிண் பவார் எழுத்துமூலம் அளித்த பதிலில், தடுப்பூசிகளுடன் மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள், பாதுகாப்பு கவசங்கள், தெர்மோ மீட்டர்கள், சிரிஞ்சிகள், சோதனை கருவிகள் உள்ளிட்டவை 65 நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சகம் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.