உத்தரப்பிரதேசம், உத்ரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சி தலைவர் சோனியாகாந்தி உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.
ஐந்து மாநிலங்களிலும் கட்சியை மறுசீரமைப்பு செய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உத்ரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கணேஷ் கொடியால் தலைமைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.