புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள கைதிகள், ஒருங்கிணைந்த இயற்கை விவசாய பண்ணை அமைத்து, இயற்கை முறையில் விவசாயம் மற்றும் ஆடு, மாடு, கோழி, முயல் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கைதிகளை நல்வழிப்படுத்தும் பல்வேறு முன்மாதிரி முயற்சிகளான கைதிகளுக்கு கைவினைப் பொருட்கள் செய்தல், யோகா போன்ற பல்வேறு பயிற்சிகளை புதுச்சேரி சிறைத்துறை, அரவிந்தர் சொசைட்டி என்ற சமூக அமைப்புடன் இணைந்து அளித்து வருகிறது.
சிறைச்சாலை வளாகத்தில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் கைதிகள் ஒருங்கிணைந்த இயற்கை விவசாயப்பண்ணை அமைத்து அன்னாசி, கத்தரிக்காய், மிளகாய் உள்ளிட்டவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகின்றனர்.
விவசாயப் பணியில் ஈடுபடும் தண்டனைக் கைதிகளுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.