பஞ்சாப்பில் மைதானத்திற்குள் புகுந்து கபடி வீரரை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் தப்பியோடிய கும்பலை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நகோதர் பகுதியில் உள்ள மைதானத்திற்குள் புகுந்த மர்ம கும்பல் திடீரென அங்கிருந்த சந்திப் சிங் என்பவர் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் சந்தீப் சிங்கின் உடலில் 10 தோட்டாக்கள் வரை பாய்ந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் குடியிருக்கும் சந்திப் சிங் சொந்த ஊரில் கபடி போட்டிகளை நடத்தி வந்ததாகவும், துப்பாகிச் சூடு சம்பவம் குறித்தும் தப்பியோடியவர்கள் குறித்தும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.