செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

பிரதமர் தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம்..!

Mar 13, 2022 02:54:12 PM

இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலை, உக்ரைன் போரால் நிலவும் உலகளாவிய சூழல் ஆகியன குறித்துப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் 18ஆவது நாளாக இன்றும் நீடிக்கிறது. இதனால் அந்நாட்டில் இருந்து இருபது இலட்சத்துக்கு மேற்பட்டோர் வெளியேறி அண்டை நாடுகளில் புகலிடம் தேடியுள்ளனர்.

உக்ரைனில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காகத் தங்கியிருந்த இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். போரின் விளைவாகக் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

உக்ரைன், ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா மீதும், அதற்குத் துணைபோகும் பெலாரஸ் மீதும் மேலைநாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

 

இந்நிலையில் இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலை, உக்ரைன் போரால் நிலவும் உலகளாவிய சூழல் குறித்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உக்ரைன் போரால் உலக அளவில் பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.




Advertisement
அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் - சந்திரபாபு நாயுடு
இந்தியாவின் வான்பரப்பு பாதுகாப்பானது, பயணிகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை - விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள்
வாரணாசியில் இன்று ரூ.6,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
2025 ஐ.பி.எல். தொடரில் தோனி விளையாடுவாரா? - சி.எஸ்.கே. சி.இ.ஓ. விளக்கம்
வனவிலங்குகளை ஏற்றிச் சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து
பிரம்ம குண்டத்தில் உள்ள காவிரி நீருக்கு குங்குமம் மற்றும் புஷ்பார்ச்சனை
ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் நிலவு வானில் தென்பட்டது
திருப்பதியில் நள்ளிரவில் பெய்த கனமழையால் ஓடை போல் ஓடிய தண்ணீர்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பிடிவாரண்ட்... சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?


Advertisement