புதுச்சேரியில் பணிமனையில் இருந்து பழுது நீக்கி கொண்டு வரப்பட்ட டிராவல்ஸ் வேன், சாலையில் சென்று கொண்டிருந்த போதே திடீரென தீப்பற்றி எரிந்தது.
டிராவல்ஸ் நடத்தி வரும் பச்சையப்பன் என்பவருக்கு சொந்தமான ஸ்வராஜ் மஸ்தா வேன் பழுதானதால், ஓட்டுநர் கந்தசாமி குருமாம்பேட்டில் உள்ள பணிமனைக்கு கொண்டு சென்று பழுது நீக்கம் செய்துள்ளார்.
பிறகு வேனை ஓட்டிக் கொண்டு வந்த அவர், வழுதாவூர் சாலை வழியாக வந்துக் கொண்டிருந்த போது பின்பக்க சீட்டில் இருந்து புகை வந்ததை சுதாரித்து, வேனை சாலையோரம் நிறுத்திவிட்டு உடனடியாக கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களிலேயே வேன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த நிலையில், வேனின் பேட்டரியிலிருந்து செல்லும் ஒயர்களில் "ஷார்ட் சர்கியூட்" ஏற்பட்டு வேன் தீப்பற்றியதாக கூறப்படுகிறது.