தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப். மீதான வட்டி விகிதத்தை 8 புள்ளி 10 சதவீதமாக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 2021 - 22ஆம் நிதியாண்டிற்கான பி.எப். மீதான வட்டி விகிதம் 8 புள்ளி 50 சதவீதத்திலிருந்து, 8 புள்ளி 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1977 - 78ஆம் நிதியாண்டில் வட்டி விகிதம் எட்டு சதவீதமாக இருந்த நிலையில், அந்த காலக்கட்டத்திற்கு பின் மிக குறைந்த வட்டி விகிதமாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த 2015-16ஆம் நிதியாண்டில் அதிகபட்சமாக 8 புள்ளி 8 சதவீதம் வட்டி வழக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு அதன் விகிதம் படிப்படியாக குறைக்கப்பட்டது.