நான்கு மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதையொட்டிக் குஜராத்தின் நடைபெற்ற வாகனப் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து அகமதாபாத்துக்குச் சென்றடைந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு மாநில பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து மாநில பாஜக அலுவலகமான கமலம் வரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிரதமர் மோடி ஊர்வலமாகச் சென்றார்.
வழியெங்கும் சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற பாஜகவினரும் பொதுமக்களும் அவரை வரவேற்றனர்.
பிரதமரை வரவேற்க மேளதாளத்துடன் நாட்டுப் புறக் கலைஞர்களின் நடனமும் நடைபெற்றது.
நான்கு மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியின் அடையாளமாகக் கையசைத்த பிரதமர், தன்னை வரவேற்ற மக்களுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தார்.