உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ரஷ்யா நாளொன்றுக்கு 1 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நிலையில், 47 லட்சம் பேரல்களை ஏற்றுமதி செய்கின்றன.
இந்நிலையில், வரும் நாட்களில் ரஷ்யாவின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால், சர்வதேச ஆற்றல் முகமை விடுவிக்க உத்தரவிட்ட கச்சா எண்ணெயால் பற்றாக்குறையை சமாளிக்க முடியாது என துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றிற்கு 118 டாலருக்கு மேல் உயர்ந்த நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் 122ஆவது நாளாக மாற்றம் ஏற்படவில்லை. தேர்தல் முடிவடைய உள்ளதால் வரும் வாரங்களில் அதன் விலை உயரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.