செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

புனே மெட்ரோ ரயில் தொடக்கி வைத்த பிரதமர்... ஆற்றுத் திருவிழா கொண்டாட வலியுறுத்தல்

Mar 06, 2022 09:25:43 PM

புனேயில் மெட்ரோ ரயில் போக்குவரத்துத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, ஆற்றுக்குப் புத்துயிரூட்டும் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார். ஆற்றுநீரை முறையாகப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நகரங்களில் ஆற்றுத் திருவிழா கொண்டாட வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். 

மகாராஷ்டிரத்தின் புனே மாநகராட்சி வளாகத்தில் சத்ரபதி சிவாஜி சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பகத்சிங் கோசியாரி, புனே மேயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 புனேயில் கிழக்கு - மேற்கு, தெற்கு - வடக்கு என இரண்டு வழித்தடங்களில் 32 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாகக் கிழக்கு மேற்குத் தடத்தில் பணி முடிக்கப்பட்ட 12 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

 பயணச்சீட்டு வாங்கி, கார்வார் கல்லூரி முதல் ஆனந்த் நகர் வரை மெட்ரோ ரயிலில் சென்ற பிரதமர் மோடி, அதே ரயிலில் பயணித்த மாணவர்கள் மற்றும் பயணியரிடம் கலந்துரையாடினார்.

 பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிரத் துணை முதலமைச்சர் அஜித் பவார் நினைவுப் பரிசு வழங்கினார்.

 புனேயில் பாயும் மூலா, முத்தா ஆறுகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து ஆறுகளுக்குப் புத்துயிரூட்டும் இரண்டாயிரத்து 550 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் உட்படப் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

 மின்சாரத்தால் இயங்கும் 140 பேருந்துகளைத் தொடக்கி வைத்ததுடன், அவற்றுக்கான பணிமனையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

 விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு நகரிலும் மின்சார வாகனங்கள் மூலம் மாசில்லாப் போக்குவரத்து வசதியை வழங்குவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் அகற்றும் பணிக்கு ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதிலும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

நகரங்களில் ஆற்றுத் திருவிழா கொண்டாடும்படி வலியுறுத்திய பிரதமர், இது ஆற்றுநீரை முறையாகப் பயன்படுத்துவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும் எனத் தெரிவித்தார்.

கல்வி, தகவல் தொழில்நுட்பம், வாகனத் தொழில் மையமாகப் புனே உருவாகியுள்ளதாகவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மெட்ரோ ரயில் திட்டத்தால் காற்றுமாசு பெருமளவில் குறையும் எனத் தெரிவித்தார். 

 


Advertisement
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தேவ் தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் முழுவதும் விழாக் கோலம்
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது
திருப்பதியில் வி.ஐ.பி.தரிசன டிக்கெட் வழங்கும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையம் திறப்பு
இரவு முதல் தொடர் மழை - பல இடங்களில் பெருக்கெடுத்த தண்ணீர்..
வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகாரம் பெற வேண்டும் - பிரதமர் மோடி
பா.ஜ.க.வில் உள்ள கறைபடிந்த நபர்கள் மீது நடவடிக்கை - நிதின் கட்கரி வலியுறுத்தல்
பழங்குடியினர் இடையே மோதலை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கொள்கை - மோடி

Advertisement
Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

Posted Nov 16, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பிரீசர் பாக்ஸில் மாமியார் திடீர் தீயில் கருகிய மருமகள் துக்க வீட்டில் துயர சம்பவம்..! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மேலாளர்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்

Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?


Advertisement