இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 6 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து 5 ஆயிரத்து 921 ஆக பதிவாகி உள்ளது.
24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 289 பேர் உயிரிழந்த நிலையில், 11 ஆயிரத்து 651 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 63 சதவீதமாக குறைந்திருப்பதுடன், நாடு முழுவதும் 63 ஆயிரத்து 878 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.