ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை வாங்கும் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கவா? வேண்டாமா? என்பது பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய - அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்புக் குறித்த விவாதத்தில் ரஷ்யாவிடம் எஸ் 400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை இந்தியா வாங்குவது குறித்துப் பலமுறை பேசப்பட்டதாகத் தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு அதிகாரி டொனால்டு லூ தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் மதிப்புமிக்க கூட்டாளியாக இந்தியா உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.