மகாராஷ்ட்ராவில் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியதை அடுத்து மும்பை உள்பட 14 மாவட்டங்களில் ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திரையரங்குகள், உணவகங்கள், மால்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள் போன்றவை 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த 14 மாவட்டங்களில் வசிப்பவர்கள் 90 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும் 70 சதவீதம் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் மகாராஷ்ட்ரா அரசு தெரிவித்துள்ளது.