உக்ரைன் தலைநகர் கீவ்வில் அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு நீக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் அங்குள்ள இந்திய மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில்களை பயன்படுத்தி மேற்குப்பகுதிகளுக்கு செல்லுமாறும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேற்குப்பகுதிகள் பாதுகாப்பான பகுதிகளாக இருப்பதாகவும், அங்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை தட்டுபாடின்றி கிடைப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த சூழலில் போர்ப்பதற்றம் மிகுந்து காணப்படும் கீவ்வில் உள்ள இந்திய மாணவர்கள் இலவச சிறப்பு ரயில்களை பயன்படுத்தி மேற்குப்பகுதிகளுக்கு செல்லுமாறு அந்நகரில் உள்ள இந்திய தூதரகம் டுவிட்டர் வாயிலாக அறிவுறுத்தியுள்ளது.