பிரிட்டனில் மார்ச் மாதத்தில் நடைபெறும் விமானப்படைப் போர்ப்பயிற்சிக்கு இந்தியாவின் போர் விமானங்களை அனுப்பப்போவதில்லை என விமானப்படை அறிவித்துள்ளது.
பிரிட்டனில் மார்ச் 6 முதல் 27 வரை கோப்ரா வாரியர் என்னும் பெயரில் பன்னாட்டு விமானப்படைகளுக்கான போர்ப்பயிற்சி நடைபெற இருந்தது.
அதில் பங்கேற்க இந்திய விமானப்படை சார்பில் 5 இலகுவகை தேஜஸ் போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட இருந்தன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள சூழலில் இந்தப் போர்ப் பயிற்சிக்கு விமானங்களை அனுப்பப்போவதில்லை என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.