உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அதன் அண்டை நாடுகளில் உள்ள தூதரகங்களின் அதிகாரிகள் குழுக்களை மத்திய வெளியுறவு அமைச்சகம் நியமித்துள்ளது.
போலந்து, ஹங்கேரி,ஸ்லோவேகியா உள்ளிட்ட நாடுகளின் எல்லையருகில் முகாம்கள் அமைத்து உக்ரைனில் உள்ள இந்தியர்களை அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எல்லை நோக்கி வரும்போது அவர்களை அண்டை நாடுகளின் தூதரகங்கள் மூலம் மீட்டு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்