தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அளித்த புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
தேர்தல் தொடர்பாக புகார்களை தெரிவிக்க, டுவிட்டர் தளத்தில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு பதிலாக இந்திய தேர்தலை ஆணையத்தை குறிப்பிட்டு அண்ணாமலை டேக் செய்திருந்தார்.
இதனை அடுத்து அவருக்கு பதிலளித்த இந்திய தேர்தல் ஆணையம், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தாங்கள் நடத்துவதில்லை என்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தது.
மேலும், முறைகேடு புகார்களை உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.