குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூன்றுநாள் பயணமாக விசாகப்பட்டினம் செல்கிறார். இன்று இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தின நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் கடற்படையின் சாகச நிகழ்ச்சிகளை குடியரசுத் தலைவர் பார்வையிடுகிறார்.
ஆந்திர ஆளுநர் ,முதலமைச்சர் உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர் .சுமார் 60 கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் 50 கடற்படை விமானங்கள் உள்ளிட்டவற்றுடன் பத்தாயிரம் கடற்படை வீரர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன. தீவிரவாதத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் இதில் நடைபெற உள்ளது.
வங்கக் கடலில் இந்தியாவின் அதி நவீன போர்க்கப்பல்கள், விசைப்படகுகள் அணிவகுப்பு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரிகுமார் நேற்று பார்வையிட்டார்