விராட்கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு பிசிசிஐ, 10 நாட்களுக்கு விளையாட்டில் இருந்து ஓய்வு அளித்துள்ளது.
வரும் 24-ம் தேதி முதல் இலங்கை அணிக்கு எதிரான போட்டி தொடர்கள் தொடங்க உள்ள நிலையில் அதில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதிலும் விராட் அந்த அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்காமல் டெஸ்ட் போட்டி தொடரில் மட்டும் பங்கேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
விடுப்பு அளிக்கப்பட்டதையடுத்து கடந்த 2-வது டி20 போட்டியில் அரை சதம் விளாசி அணியின் தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்த இருவருமே இன்றைய கடைசி டி20 போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. அவர்கள் இன்று சொந்த ஊர் திரும்புவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.