இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட இன்று சற்று குறைந்து 22 ஆயிரத்து 270ஆக பதிவாகி உள்ளது.
ஒரே நாளில் கொரோனா பாதித்த 325 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60 ஆயிரத்து 298 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 1 புள்ளி 8 சதவீதமாக குறைந்திருப்பதுடன், நாடு முழுவதும் 2 லட்சத்து 53 ஆயிரத்து 739 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.