லஷ்கர் இ தொய்பா அமைப்பினருக்கு வேலை பார்த்து வந்ததாக இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரி ஒருவர், லஷ்கர் தீவிரவாத அமைப்புக்கு ரகசியமாக பணியாற்றிய சிம்லாவின் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அரவிந்த் திக்விஜய் நேகி கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் நேகி சந்தேகப்படும்படியான நபர் ஒருவருக்கும் முக்கியமான தகவல்களைக் கசியவிட்டதாகவும் என்ஐஏ அதிகாரி தெரிவித்துள்ளார்.