பணம் மோசடி வழக்கு தொடர்பாக மும்பையில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதாரி ஹசீனா பார்கர் வீட்டில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சட்டவிரோத சொத்து விற்பனை மற்றும் ஹவாலா பண பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது.
தாவூத்துக்கு எதிராக அண்மையில் என்ஐஏ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், மொத்தம் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், வழக்கில் தொடர்புடைய மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் ஒருவரும் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.