ஒரு கோப்பை தேநீரின் விலைக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியதால் உலகளவில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் தங்களது தடுப்பூசியால் பாதுகாக்கப்பட்டதாக சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
புனேவில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியை ஏழை நாடுகளும், UNICEF மற்றும் பிற தொண்டு நிறுவனங்களும் பயன்படுத்தப்படுவதாகவும் குறைந்த விலை, அதிக உற்பத்தி மூலம் இந்தியாவின் தடுப்பூசி தேவையை 90 சதவீதம் பூர்த்தி செய்ய முடிந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் உலகளவில் 170 நாடுகள் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்துவதாக குறிப்பிட்ட அவர், மலிவு விலையில் தடுப்பூசிகளை வழங்குவதால் சுமார் 30 மில்லியன் குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்தார்.