ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை காரணமாக நேற்று இந்திய பங்கு சந்தைகள் சரிவை சந்தித்த நிலையில், இன்று சற்று ஏற்றம் கண்டன.
உக்ரைன் தொடர்பாக அமெரிக்கா-ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையில் எந்தவிதமான தீர்வும் எட்டப்படாத நிலையில், எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைன் நாட்டிற்குள் நுழையும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் ஐரோப்பா மற்றும் ஆசிய சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கச் சந்தையில் ஏற்கனவே பணவீக்க உயர்வால் சந்தை வர்த்தகம் சரிவை சந்தித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் நேற்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் ஆயிரத்து 500 புள்ளிகள் வரை சரிந்து ரீடைல் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி இந்திய பங்குச் சந்தைகள் சற்று ஏற்றம் கண்டுள்ளன. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 353 புள்ளி 58 புள்ளிகள் உயர்ந்து, 56 ஆயிரத்து 759 புள்ளி 42 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தையில் நிஃப்டி 103 புள்ளி 60 புள்ளிகள் உயர்ந்து, 16 ஆயிரத்து 946 புள்ளி 40 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.