உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் பாதுகாப்புடன் இருப்பதாக இஸ்லாமியப் பெண்கள் உணர்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கான்பூர் தேகட் என்னுமிடத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், உத்தரப்பிரதேசத்தில் முன்பிருந்த ரவுடிக் கும்பல்கள் உயிருக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். மீண்டும் அவர்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடாமல் இருக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பாஜக ஆட்சியில் பாதுகாப்பு என உணர்வதால் இஸ்லாமியப் பெண்கள் அதிகம்பேர் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வதாகக் குறிப்பிட்டார். 2017ஆம் ஆண்டுக்கு முன் இலட்சக் கணக்கில் போலி ரேசன் கார்டுகள் இருந்ததாகவும், பாஜக ஆட்சியில் அவை ஒழிக்கப்பட்டதால் கோடிக்கணக்கான ஏழைகள் இலவச உணவுதானியங்களைப் பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.