கர்நாடகத்தின் மாண்டியாவில் ஒரு பள்ளியில் ஹிஜாப்புடன் வந்த சிறுமியரை உள்ளே அனுமதிக்கும்படி பெற்றோரும், ஹிஜாப்பை எடுத்துவிட்டு வரும்படி ஆசிரியரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகத்தில் பத்தாம் வகுப்பு வரையுள்ள பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாண்டியாவில் உள்ள ஒரு பள்ளிக்கு ஹிஜாப் அணிந்த சிறுமியரைப் பெற்றோர் அழைத்து வந்தனர். வாயிலில் நின்ற ஆசிரியர் ஹிஜாப்பை அகற்றிவிட்டு உள்ளே வரும்படி மாணவியரைக் கேட்டுக்கொண்டார்.
அதை ஏற்க மறுத்த பெற்றோர் முதலில் உள்ளே அனுமதிக்கும்படியும், வகுப்புக்குச் சென்றபின் ஹிஜாப்பை அகற்றிக்கொள்ளலாம் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.