மேற்கு வங்கச் சட்டமன்றக் கூட்டத் தொடரை ஆளுநர் முடக்கியுள்ளதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மேற்கு வங்கச் சட்டமன்றக் கூட்டத் தொடரை ஆளுநர் முடக்கிய செயல், நிறுவப்பட்ட விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மாநிலத்தின் தலைவராக இருக்கும் ஆளுநர், அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுவதில் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதிலேயே ஜனநாயகத்தின் அழகு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.