ஈரான் நாட்டுக்கு மனிதாபிமான அடிப்படையில் 10 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியா அனுப்பியுள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், வெட்டுக்கிளி கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஈரானுக்கு 40 ஆயிரம் லிட்டர் மாலத்தியான் பூச்சிக்கொல்லி மருந்தை அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் காசநோய் எதிர்ப்பு மருந்துகளையும், பத்து லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசியையும் அனுப்பியுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.