புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-04 என்ற அதிநவீன ரேடார் செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இந்த செயற்கைக்கோள் ஆயிரத்து 710 கிலோ எடையுடையது. 5 ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட இந்த செயற்கை கோள் புவியில் இருந்து 529 கிலோ மீட்டர் உயரே சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இதனுடன் ஆய்வுத் திட்டத்தின் கீழ் மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட 2 சிறிய வகை செயற்கைக்கோள்களும் ஏவப்பட உள்ளன. இந்த ரேடார் செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு, ராணுவப் பாதுகாப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவி புரியும். அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டதாகும்.