புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான உரிமை எந்த விதத்திலும் மறுக்கப்படாது என்றும் இங்கு முதலமைச்சர் மட்டுமே முதலமைச்சராக செயல்படுகிறார் என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி மற்றும் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை ஆரியபாளையத்தில் நடைபெற்றது. இதில் முதமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.