மத்திய அரசின் டிஜிட்டல் கரன்சி வரும் நிதியாண்டில் வெளியிடப்படுமென என அறிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், புழக்கத்தில் உள்ள ரூபாய்க்கும் டிஜிட்டல் கரன்சிக்கும் வித்தியாசம் இருக்காது என தெரிவித்தார்.
மும்பையில் இது குறித்து பேசிய அவர், கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி உறுதியான கொள்கையை கொண்டுள்ளதாகவும், கிரிப்டோ கரன்சிகள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் நிதி நிலையின் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கிரிப்டோ கரன்சி முதலீடு குறித்து எச்சரித்த சக்திகாந்த தாஸ், கிரிப்டோ கரன்சிகளுக்கு எந்தவித மதிப்பும் இல்லை என்றும் அதில் அதிகளவில் முதலீடு செய்வதன் மூலம் எந்தவித பயனும் பெற முடியாது என்றும் தெரிவித்தார்.