இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் சஹரன்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், இஸ்லாமிய பெண்களின் நலனுக்காக பாஜக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகவும், காலம் காலமாக இழைக்கப்பட்டு வந்த அநீதியான முத்தலாக் நடைமுறையை ஒழிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
பாஜகவிற்கு இஸ்லாமிய பெண்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதன் காரணமாகவே, எதிர்க்கட்சிகள் தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.