தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் கொரோனா சிகிச்சை மற்றும் தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், கொரோனா தொற்று உறுதியாகும் விதம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி 20.75 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 4.4 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளதாக கூறினார்.
புனேவை சேர்ந்த ஜெனோவா பயோ பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் எம்ஆர்என்ஏ வகை தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.