ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில் பாலத்தின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
ரியாசி மாவட்டத்தில் பக்கல் மற்றும் கவுரி இடையே செனாப் ஆற்றின் ஆழமான பள்ளத்தாக்கில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் ஆயிரத்து 300 மீட்டர் நீளம் கொண்டது. கடந்த 2002ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பாலம் பாரிசில் உள்ள ஈபில் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரமானது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பாலம் ரிக்டர் அளவு கோலில் 8 புள்ளிகள் வரை நிலநடுக்கம் ஏற்பட்டாலும் தாங்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மேகக்கூட்டங்களுக்கு நடுவே இந்தப் பாலத்தின் அழகுறு தோற்றத்தை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.