கொரோனா சூழலில் உள்நோயாளியாகச் சேர்க்கவும், அறுவைச் சிகிச்சைக்கும் முன் நோயாளிகளுக்குச் சோதனை செய்து கொரோனா இல்லை எனச் சான்று பெற்றிருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.
இப்போது கொரோனா சோதனையைக் கைவிடுவதாக அறிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, அறுவைச் சிகிச்சைக்கும், வழக்கமான பராமரிப்புக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அறிகுறியற்ற நோயாளிகள், வெளிநோயாளிகள், அவசர நோயாளிகள் ஆகியோருக்கு இது பொருந்தும் என அறிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் வெளியிட்ட தேசிய வழிகாட்டுதலின்படி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.