பாலிவுட் நடிகர் சோனு சூட், கார் விபத்தில் சிக்கிய நபரை தனது கரங்களால் தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
பஞ்சாப் மாநிலம் மோகா (Moga) அருகே உள்ள பைபாஸ் சாலையில் இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக வந்த சோனு சூட், விபத்துக்குள்ளான காரின் இருக்கையில் சிக்கி கொண்ட ஓட்டுநரை பக்குவமாக மீட்டு தன் காருக்கு தூக்கி சென்றார்.
காயமடைந்த அந்த நபரை தன் மடியில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.