வரும் திங்கட்கிழமை முதல் உச்ச நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாரத்தின் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நேரடியாக வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் மற்ற நாட்களில் காணொலி மூலமாகவே அல்லது நேரடியாகவோ வழக்கு விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது 3 வழக்கறிஞர்களுக்கு மட்டும் அனுமதி, விசாரணைக்கு இடையில் 15 நிமிட இடைவெளியில் அறையை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை நடத்தக் கோரி தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் கடிதம் எழுதிய நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.