புதுச்சேரியில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலின் போது கொள்முதல் செய்யப்பட்ட கொரோனா பாதுகாப்பு சாதனங்களில் 30 லட்ச ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக துணை நிலை ஆளுநரிடம் மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.
சட்டப்பேரைவை தேர்தலுக்காக வாங்கிய கொரோனா பாதுகாப்பு சாதனங்களில் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் தெர்மா மீட்டர், பாதுகாப்பு கவசம், நான்கு சக்கர நாற்காலிகள் குறித்து கணக்குகள் இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்ததாகவும், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த துணை நிலை ஆளுநருக்கு புகார் அளித்துள்ளதாகவும் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.