ரஷ்ய தயாரிப்பு ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசின் மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதனால் இந்தியாவுக்கு 9 வது கொரோனா தடுப்பூசி கிடைத்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் யுத்தம் மேலும் வலிமை பெற்றிருப்பதாகக் கூறினார்.
ஒரே டோஸ் ஆக செலுத்தப்படும் இந்த தடுப்பூசியை உடல் நலிவுடையோர் பூஸ்டர் டோஸ்களுக்குப் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.மொத்தம் 29 நாடுகளில் ஸ்புட்னிக் லைட்டுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக ஸ்புட்னிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ்க்கு எதிராக 65 சதவீதத்திற்கு மேல் பயன் தருவதாக ஸ்புட்னிக் லைட் பற்றிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன