அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இன்றுமுதல் நூறு சதவீதம் அலுவலகத்திற்கு திரும்பி வரலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பிப்ரவரி 15 ம் தேதி வரை 50 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து இன்று முதல் 100 சதவீத பணியாளர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்க உள்ளன. இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங், கொரோனா தொற்று தடுப்பு விதிகளை பணியாளர்கள் பின்பற்றுவதை துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
வீட்டில் இருந்து பணியாற்றும் அரசு ஊழியர்களுடன் காணொலி வாயிலாக ஜித்தேந்தர் சிங் உரையாடினார்.