இந்திய கிரிக்கெட் அணி, தனது ஆயிரமாவது போட்டியில் வெற்றிப் பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால், மேற்கு இந்திய தீவுகள் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சாஹல் 4 விக்கெட்டுகளையும், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி, 28 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணித் தலைவர் ரோகித் ஷர்மா 60 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.