காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீதான ஆர்.எஸ்.எஸ். அவதூறு வழக்கு விசாரணை வருகிற 10-ந் தேதி முதல் நாள் தோறும் நடத்தப்படும் என பிவண்டி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் மகாத்மா காந்தியின் கொலைக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக ராகுல்காந்தி பேசி இருந்தார்.
அவரது இந்த பேச்சு ஆர்.எஸ்.எஸ். பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக ராஜேஷ் குந்தே என்பவர் தானே மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , வருகிற 10-ந்தேதி முதல் நாள்தோறும் நடத்தப்படும் என கூறி ஒத்தி வைத்தார்.