ஜம்மு காஷ்மீரின் பனிப்பிரதேசமான குல்மார்க் பகுதியில் உலகின் மிகப்பெரிய இக்ளூ உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
சுமார் 37 புள்ளி 5 அடி உயரமும் 44 புள்ளி 5 அடி அகலமும் கொண்ட பனியால் அமைக்கப்பட்ட இக்ளூ உணவகம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்கிறது.எஸ்கிமோக்கள் இக்ளூ என்றழைக்கப்படும் பனி வீடுகளை கட்டுவது போல இந்த உணவகம் கட்டப்பட்டுள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் இதுபோன்ற சில உணவகங்கள் இருப்பதை அறிந்து தாம் உலகின் மிகப் பெரிய பனிவீடு உணவகத்தை அமைக்க திட்டமிட்டதாக கூறுகிறார் இதனை வடிவமைத்த சையத் வாசிம் ஷா.சுமார் 40 பேர் இதனுள் அமர்ந்து உணவு உண்ணமுடியும்.