சர்வதேச விமான சேவைகளை மேலும் விரிவாக்கம் செய்ய உள்ளதாக இன்டிகோ நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுள்ள ராகுல் பாட்டியா தெரிவித்துள்ளார்.
குறைந்த கட்டணத்துக்கு விமான சேவைகளை வழங்கி வரும் இன்டிகோ நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான ராகுல் பாட்டியா அதன் நிர்வாக இயக்குனராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏர் இந்தியா தற்போது டாடா நிறுவனத்துக்கு கைமாறியுள்ள நிலையில், அந்நிறுவனத்துடன் போட்டி போடும் விதமாக, இன்டிகோ நிறுவனம் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக 8,700 கிலோமீட்டர் வரை நிற்காமல் பயணம் செய்யக் கூடிய Airbus A321 XLR ரக விமானங்களை இன்டிகோ நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.