மதுரையில் நான்கு ஆண்டுகளுக்குள் ஏய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்பியான தொல்.திருமாவளவன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, மதுரை தோப்பூரில் அமைய உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2026 அக்டோபர் மாத்தத்திற்குள் நிறைவு பெறும் என்று அறிவித்துள்ளது.
இதுவரை 22 ஏய்ம்ஸ் மருத்துவமனைகளைப் புதிதாகக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்