இந்தியாவில் கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 169 கோடியை எட்டியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் இருந்து தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இவற்றில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு உள்நாட்டு உற்பத்தி தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியிருந்தது.
இதனை தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. முதல் டோஸ், 2வது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இதே போல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 65 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இதனிடையே மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பான DCGI யின் நிபுணர்க் குழுவினர் ரஷ்யாவின் ஒற்றை டோஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட்டை அவசர காலப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளது.