கடந்த 2014 முதல் 2021-ஆம் ஆண்டு வரை 4 கோடியே 28 லட்சம் போலி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ரத்து செய்துள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் செளபே எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உரிய சரிபார்ப்புப் பணிகளுக்குப் பிறகு தகுதியற்ற பயனாளிகளை களையவும், போலி குடும்ப அட்டைகளை ரத்து செய்யவும் தங்கள் குடும்ப அட்டைதாரர்கள் பட்டியலை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அவ்வப்போது மறுஆய்வு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.