50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இந்த மாதம் வீணாகி விடும் என வெளியான தகவல்கள் தவறானது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி இயக்கத்தின் தொடக்கத்தில் இருந்து, தடுப்பூசிகள் வீணாவது மிக குறைந்தபட்ச அளவில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும், இருப்பு குறித்து அவ்வப்போது ஆராய வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாகாமல் இருப்பதை உறுதிசெய்ய மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.