மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இதுதொடர்பாக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய கலாசாரத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இதற்காக மொழியியல் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
செம்மொழி அந்தஸ்து வழங்கும் விஷயம் தொடர்பாக உள்துறை, கல்வி அமைச்சகத்துடன் விவாதிக்க வேண்டி இருப்பதால் தான் முடிவெடுக்க அதிக காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றும் அவர் கூறினார்.