இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளைக் கண்டித்து இன்று தொடங்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியை தூதரக ரீதியாக இந்தியா புறக்கணித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்பட 40க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் தொடக்க விழாவில் இந்தியா பங்கேற்கவில்லை.
நிறைவு விழா நிகழ்ச்சிகளையும் புறக்கணிக்கப் போவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பையடுத்து சீனா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட மாட்டாது என்று பிரச்சார் பாரதியின் தலைமை நிர்வாகி சசிசேகர் வெம்பட்டி அறிவித்துள்ளார்.